வெற்றிக்கொடி பிடித்திடுவோம் | Vettikkodi pidiththiduvom
வெற்றிக்கொடி பிடித்திடுவோம் | Vettikkodi pidiththiduvom
வெற்றிக்கொடி பிடித்திடுவோம்
வெற்றிக்கொடி பிடித்திடுவோம் நாம்
வீர நடை நடந்திடுவோம்
வெள்ளம் போல சாத்தான் வந்தாலும்
ஆவியானவர் கொடி பிடிப்பார்
அஞ்சாதே என் மகனே!
நீ அஞ்சாதே என் மகளே!
காடானாலும் மேடானாலும்
கர்த்தருக்குப் பின் நடப்போம்
கலப்பையில் கை வைத்திட்டோம்
நாம் திரும்பிப் பார்க்கமாட்டோம்
ஆயிரம்தான் துன்பம் வந்தாலும்
அணுகாது அணுகாது
ஆவியின் பட்டயம் உண்டு - நாம்
அலகையை வென்று விட்டோம்
கோலியாத்தை முறியடிப்போம்
இயேசுவின் நாமத்தினால்
விசுவாசக் கேடயத்தால்
பிசாசை வென்றிடுவோம்




