கரம் பிடித்து | Karam Pidiththu / PPT

கரம் பிடித்து | Karam Pidiththu / PPT

கரம் பிடித்து | Karam Pidiththu / PPT
கரம் பிடித்து | Karam Pidiththu / PPT

உம்மை விட்டு நான் தூரம் போனாலே ஜீவனும் போகுதே உந்தன் அன்பை விட்டு நான் பிரிய நினைத்தாலே (என்) வாழ்கையும் காணமே 

மூச்சுக் காற்றாக கலந்த தேவனே 
உந்தன் நினைவாக வாழவேண்டுமே 

கரம்பிடித்து என்னை  நடத்தி வந்த  என் இயேசுவே 
என் கதறலைக் கேட்டு கண்ணீரைத் துடைத்த ராஜனே -(2)

உலக வாழ்க்கை அது ஒரு முறை தானே 
உலக மேன்மைகளும்  குப்பையும் தானே 
மூச்சு கொடுத்தவரை மூச்சு உள்ளவரை 
நினைத்து வாழ்ந்திட்டலே நிரந்தரம் தானே .................... 
வாழ்வை அளிக்க வாழ்க்கை இழந்தாரே  
உன்னை உயர்த்த சிலுவை சுமந்தாரே -(2)
 கரம் பிடித்து என்னை நடத்தி வந்த  என் இயேசுவே 
கதறலைக் கேட்டு கண்ணீரை துடைத்த என் ராஜனே.....

உம்மிடம் பேச ஆசைப்பட்டேனே உமக்காக வாழ விரும்புகிறேனே 
செட்டை நிழலின் கீழ் அடைக்கலம் புகுந்து 
ஆனந்த களிப்புடன் அகமகிழ்வேனே  உந்தன் வசனம்
 காலுக்கு தீபம் அதுவே எனது ஆவியின் பட்டயம் -(2)
 கரம் பிடித்து என்னை நடத்தி வந்த  என் இயேசுவே 
கதறலைக் கேட்டு கண்ணீரை துடைத்த என் ராஜனே.....

Files