varushathai nanmaiyaal | வருஷத்தை நன்மையால் / PPT

varushathai nanmaiyaal | வருஷத்தை நன்மையால் / PPT

varushathai nanmaiyaal | வருஷத்தை நன்மையால் / PPT
varushathai nanmaiyaal | வருஷத்தை நன்மையால் / PPT

இரட்டிப்பான நன்மைகளை
தேவன் நமக்கு தந்திடுவார்-2
நினைத்துப்பார்க்காத அதிசயங்கள்
என்றும் நம் வாழ்வில் செய்திடுவார்-2

வருஷத்தை நன்மையால் முடிசூட்டிவார்
பாதை நெய்யாய் பொழிய செய்வார்-2

1.பொல்லாப்பும் வாதையும் அணுகிடாமல்
கரங்களால் நம்மை தாங்கிடுவார்-2
செட்டையின் நிழலில் மறைத்துக்கொள்வார்
தீங்கு நேராமல் காத்திடுவார்-2-வருஷத்தை

2.சத்துரு எய்திடும் ஆயுதங்கள்
ஒன்றையும் வாய்க்காமல் செய்திடுவார்-2
புதிய நன்மையால் புது பெலத்தால்
திருப்தியாக்கி நடத்திடுவார்-2-வருஷத்தை

3.பாலும் தேனும் ஓடுகின்ற
கானான் தேசத்தை தந்திடுவார்-2
ஜெயத்தின் மேலே ஜெயம் தருவார்
செழிப்பாய் நம்மை நடத்திடுவார்-2-வருஷத்தை

Files