எல்லா கனத்திற்கும் பாத்திரரே
எல்லா கனத்திற்கும் பாத்திரரே
எல்லா கனத்திற்கும் எல்லா மகிமைக்கும்
பாத்திரர் பாத்திரரே
எல்லா ஜனத்திற்கும் மிகுந்த சந்தோஷம்
தருபவரும் நீரே - 2
அவர் வார்த்தையில் வல்லவர் வாழ்க்கையில் நல்லவர்
ஆபத்தில் அனுகூலமானவர் - 2
அவர் ராஜா இயேசு ராஜா
என் வாழ்க்கையை மாற்றிய ராஜா - 2
மேலே வானம் கீழே பூமி எல்லாவற்றிலும்
உந்தன் நாமம் மட்டுமே உயர்ந்ததைய்யா
மேலே வானம் கீழே பூமி எல்லாவற்றையும்
உந்தன் வார்த்தை மட்டுமே படைத்ததைய்யா – 2
அவர் அதிசயமானவர் ஆலோசனைகர்த்தர்
நித்தியபிதாவுமானவர் - 2
அவர் ராஜா இயேசு ராஜா
என் நிலைமையை உயர்த்திய ராஜா - 2
அவர் சர்வத்தில் உயர்ந்தவர் சாவாமையுடையவர்
சாபத்தை உடைத்த பெரியவர் -2
அவர் ராஜா இயேசு ராஜா
என்றென்றும் ராஜாதி ராஜா – 2
அவர் சேனைகளின் கர்த்தர் யாக்கோபின் தேவன்
உயர்ந்த அடைக்கலமானவர் – 2
அவர் ராஜா இயேசு ராஜா
என்றும் நம்மோடு இருக்கும் ராஜா - 2




