என்னோடிரும் மாநேச கர்த்தரே | Ennodirukkum maanesa karthare

என்னோடிரும் மாநேச கர்த்தரே | Ennodirukkum maanesa karthare

என்னோடிரும் மாநேச கர்த்தரே | Ennodirukkum maanesa karthare
என்னோடிரும் மாநேச கர்த்தரே | Ennodirukkum maanesa karthare

இயேசுவே எங்கள் துணை
 
என்னோடிரும், மா நேச கர்த்தரே,
வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே,
மற்றோர் சகாயம் அற்ற போதிலும்
நீங்கா ஒத்தாசை நீர், என்னோடிரும்
 
நீர்மேல் குமிழிபோல் என் ஆயுசும்,
இம்மையின் இன்ப வாழ்வும் நீங்கிடும்,
கண் கண்ட யாவும் மாறி வாடிடும்,
மாறாத கர்த்தர் நீர், என்னோடிரும் 
 
நீர் கூடநின்று அருள் புரியும்,
பிசாசின் கண்ணிக்கு நான் தப்பவும்
என் துணை நீர், என் தஞ்சமாயிரும்,
இக்கட்டில் எல்லாம் நீர் என்னோடிரும் 
 
நீர் ஆசீர்வதித்தால் கண்ணீர் விடேன்,
நீரே என்னோடிருந்தால் அஞ்சிடேன்,
சாவே எங்கே உன் கூரும் ஜெயமும்?
நான் உம்மால் வெல்ல நீர் என்னோடிரும் 
 
நான் சாகும் அந்தகார நேரத்தில்
உம் சிலுவையைக் காட்டும், சாகையில்
விண் ஜோதி வீசி இருள் நீக்கிடும்,
வாழ்நாள் சாங்காலிலும் என்னோடிரும்