எந்தன் இயேசு வல்லவர் | Enthan ijesu vallavar

எந்தன் இயேசு வல்லவர் | Enthan ijesu vallavar

எந்தன் இயேசு வல்லவர் | Enthan ijesu vallavar
எந்தன் இயேசு வல்லவர் | Enthan ijesu vallavar

இயேசு வல்லவர்

எந்தன் இயேசு வல்லவர் என்றும் நடத்துவார்
ஆ, பேரின்பம் அவர் என் தஞ்சமே
அனுதினம் அன்பருடன் இணைந்து செல்லுவேன்
 
அற்புதமாம் அவர் அன்பு
அண்டினோர் காக்கும் தூய அன்பு
இப்பூவினில் இவரைப்போல் அன்பர் எவருண்டு
மாறாதவர் எந்தன் இயேசு என்றும் பற்றிடுவேன்
 
சர்வ வல்ல தேவனிவர்
சாந்தமும் தாழ்மை உள்ளவராம்
எந்நாளுமே எந்தனையே தாங்கிடும் வல்லவராம்
நம்பிடுவேன் என்றென்றுமாய் எந்தன் இயேசுவை
 
கர்த்தர் எந்தன் மேய்ப்பராவார்
சீரான பாதை நடத்திடுவார்
எந்தன் வழி செம்மையாக்கி ஏற்று நிறுத்துவார்
எந்தன் நேசர் காத்திடுவார் என்றும் பின் செல்லுவேன்