Enthan Ullam Puthu Kaviyale – எந்தன் உள்ளம் புதுக் கவியாலே / PPT
Enthan Ullam Puthu Kaviyale – எந்தன் உள்ளம் புதுக் கவியாலே / PPT
Enthan Ullam Puthu Kaviyale
எந்தன் உள்ளம் புதுக் கவியாலே பொங்க
இயேசுவைப் பாடிடுவேன்
அவர் நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்
அவரையே நேசிக்கிறேன்
அல்லேலூயா துதி அல்லேலூயா எந்தன்
அண்ணலாம் இயேசுவை பாடிடுவேன்
இத்தனைக் கிருபைகள் நித்தமும் அருளிய
கர்த்தனைக் கொண்டாடுவேன்
1. சென்ற காலம் முழுவதும் காத்தார் ஓர்
சேதமும் அணுகாமல்
சொந்தமாக ஆசீர் பொழிந்தெனக் கின்றும்
சுகபெலன் அளித்தாரே – அல்லேலூயா
2. சில வேளை இமைப்பொழுதே தம் முகத்தை
சிருஷ்டிகர் மறைத்தாரே
கடுங்கோபம் நீக்கித் திரும்பவும் என் மேல்
கிருபையும் பொழிந்தாரே – அல்லேலூயா
3. பஞ்சகாலம் பெருகிட நேர்ந்தாலும் தாம்
தஞ்சமே ஆனாரே
அங்கும் இங்கும் நோய்கள் பரவி வந்தாலும்
அடைக்கலம் அளித்தாரே – அல்லேலூயா
4. களிப்போடு விரைந்தெமைச் சேர்த்திட என்
கர்த்தரே வருவாரே
ஆவலோடு நாமும் வானத்தை நோக்கி
அனுதினம் காத்திருப்போம் – அல்லேலூயா




