Sarva Valla Devane – சர்வ வல்ல தேவனே
Sarva Valla Devane – சர்வ வல்ல தேவனே
Sarva Valla Devane
சர்வ வல்ல தேவனே என் இயேசுவே
சாவை வென்ற தேவனே என் இயேசுவே
அல்லேலூயா உயிர்த்தார் அல்லேலூயா (2)
1. பூமி மிகவும் பலமாக அதிரவே
தூதன் வானத்திலிருந்து இறங்கவே
கல்லறையின் கல் புரண்டு ஓடவே
காவலர் திடுக்கிட்டு நடுங்கவே
2. வேதாள கணங்கள் யாவும் ஓடவே
பாதாள சேனைகளும் நடுங்கவே
நித்திய நம்பிக்கை நமக்கு நல்கவே
நித்தமும் நம்மை வழி நடத்தவே
3. மரியாள் இயேசுவையே காணவே
மா திகைப்பாய் மனம் மகிழ்ந்தழைக்கவே
தோமாவும் சந்தேகத்தால் திகைக்கவே
உண்மையை கண்டு உள்ளம் பூரிக்கவே




