KIRUBADHARABALI / கிருபாதாரபலி / PPT
KIRUBADHARABALI / கிருபாதாரபலி / PPT
கிருபாதாரபலி
உம் கிருபை வேண்டி
கிருபாசனத்தண்டை வந்தேன்
உம் கிருபையாலே - அல்லேலூயா
கிருபாசனத்தண்டை வந்தேன் உம் கிருபையாலே.
1. காலை தோறும் புது கிருபை
என்றும் உள்ளது உம் கிருபை
பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும்
கிருபையோ நிலை பெயராதிருக்கும்
2. நோவா கர்த்தரின் கண்களிலும்
எஸ்ரா கர்த்தரின் கரத்தினிலும்
கிருபை பெற்று வென்றனரே
நானும் கிருபைக்காய் ஏங்குகிறேன்
நாமும் கிருபைக்காய் ஏங்குவோமே
3. ஸ்தோத்தரித்தால் கிருபை பெருகும்
தாழ்மையாலே கிருபை கிடைக்கும்
கிறிஸ்துவின் வார்த்தைக்கு கீழ்படிந்தால்
வாழ்க்கை கிருபையினால் நிரம்பும்
4. நித்திய கிருபைகள் வேண்டும் அப்பா
கிருபை வரங்களை தாரும் அப்பா
உம் கிருபை மட்டும் போதும் அப்பா
உம் கிருபைகள் தொடர வேண்டும் அப்பா




