Canada: வெளிநாட்டு ஊழியர்களை குறைக்கும் Justin Trudeau அரசு - இந்தியர்களுக்கு பாதிப்பா?
Canada: வெளிநாட்டு ஊழியர்களை குறைக்கும் Justin Trudeau அரசு - இந்தியர்களுக்கு பாதிப்பா?
கனடாவிற்குள் அனுமதிக்கப்படும் குறைந்த ஊதியம் பெறும் தற்காலிக வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். வேகமாக அதிகரித்து வரும் மக்கள் தொகையைச் சமாளிப்பதில் சிக்கல்களை எதிர்கொள்வதால், வீட்டு வசதி, சுகாதார போன்ற பொதுச் சேவைகளில் அந்நாடு சவால்களைச் சந்திப்பதாகப் பொருளாதார வல்லுநர்கள் கூறிவரும் நிலையில், இந்த முடிவை கனடா எடுத்துள்ளது.




