Ennodu Neer Iruppathe | என்னோடு நீர் இருப்பதே

Ennodu Neer Iruppathe | என்னோடு நீர் இருப்பதே

Ennodu Neer Iruppathe | என்னோடு நீர் இருப்பதே
Ennodu Neer Iruppathe | என்னோடு நீர் இருப்பதே

என்னோடு நீர் இருப்பதே
என் வாழ்வின் மேன்மை ஐயா
என்னோடு நீர் வருவதே
என் வாழ்வின் பாக்கியம் ஐயா

பிரசன்னமே தேவ பிரசன்னமே
போதுமே என் வாழ்விலே
நீங்க இல்லாத ஒரு நொடி கூட
என் வாழ்வில் வேண்டாம் ஐயா

இரவும் பகலும் உம் நினைவால்
என் இதயம் உம்மை தேடுதையா
வறண்ட நிலம் போல் வாடி நின்றேன்
வான்மழையாய் நீர் வந்தீரையா

உம்மை விட்டு பிரிக்கும் பாவங்களை
முழுமனதோடு வெறுத்தேன் ஐயா
பரிசுத்தமில்லாமல் உமது முகம்
ஒருநாளும் தரிசிக்க முடியாதையா

இதயம் உமக்காய் பொங்குதையா
என் நேசரே உம்மை தேடுதையா
இயேசுவே என் வாழ்வின் மேன்மையெல்லாம்
நீரே நீரே நீர்தானையா