Anaathi Snegathaal | அநாதி சிநேகத்தால்
Anaathi Snegathaal | அநாதி சிநேகத்தால்
அநாதி சிநேகத்தால்
என்னை நேசித்தீரையா
உம் காருண்யத்தினால்
என்னை இழுத்துக் கொண்டீரே
உங்க அன்பு பெரியது
உங்க இரக்கம் பெரியது
உங்க கிருபை பெரியது
உங்க தயவு பெரியது
அனாதையாக அலைந்த
என்னை தேடி வந்தீரே
அன்பு காட்டி அரவணைத்து
காத்துக் கொண்டீரே
தாயின் கருவில் தோன்றும் முன்னே
தெரிந்து கொண்டீரே
தாயைப் போல ஆற்றித்
தேற்றி நடத்தி வந்தீரே
நடத்தி வந்த பாதைகளை
நினைக்கும் போதெல்லாம்
கண்ணீரோடு நன்றி சொல்லி
துதிக்கின்றேனையா




