Alla alla kuraiyatha anbu | அள்ள அள்ள குறையாத அன்பு
Alla alla kuraiyatha anbu | அள்ள அள்ள குறையாத அன்பு
அள்ள அள்ள குறையாத அன்பு
ருசிக்க ருசிக்க தெவிட்டாத அன்பு
சொல்ல சொல்ல முடியாத அன்பு -என்
இயேசுவின் இணையில்லாத அன்பு
பெயரைச் சொல்லி அழைத்த அன்பு
என்னை உயர்த்தி வைத்த உன்னத அன்பு
என்னை கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு
என்னையும் அபிஷேகித்த அன்பு
என்னை அதிசயமாய் நடத்தின அன்பு
என்னை கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு
என்னையும் நினைத்த அன்பு
என்னை கைவிடாமல் நடத்திய அன்பு
என்னை கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு
ஊழியத்தை கொடுத்த அன்பு
என்னை ஊழியனாய் மாற்றின அன்பு
என்னை கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு




