செல்வோம் வாரீர்! | Selvom vaareer!

செல்வோம் வாரீர்! | Selvom vaareer!

செல்வோம் வாரீர்! | Selvom vaareer!
செல்வோம் வாரீர்! | Selvom vaareer!

செல்வோம் வாரீர்!

செல்வோம் வாரீர், இயேசு பேரில்
பாரில் உள்ளோர் ஆசை கொள்ள
அணி அணியாய்க் கூடிவந்து
துதி செலுத்திச் செல்வோமே, செல்வோமே!
 
ஏழே நாளில் எரிகோ கோட்டை குடை சரிந்து வீழ்ந்ததே
கோல் அடியில் செங்கடலும் இரண்டு பிரிவாய் நின்றதே - 2
கிபியோன் மேலே சூரியனும் ஆயலோனில் அம்புலியும் - 2
நடுவானில் பகல் முழுதும் நின்றதே
செல்வோமே! செல்வோமே! செல்வோமே!
 
சமுத்திரம் புரண்டு வந்தால் இயேசு கதவடைத்துத் தாளிடுவார்
இடிக்கும் மின்னல் ஒளிக்கும் அவரே வழிவகுத்துத் தந்திடுவார் - 2
இராசிகளை அதினதின் காலத்திலே வரப்பண்ணுவார் - 2
வல்லவர் நம் நடுவில் வந்தார் - செல்வோமே
செல்வோமே! செல்வோமே! செல்வோமே!
 
முகில் உலாவும் இமயம் தொட்டு அலை இரையும் குமரி வரை
அணி அணியாய் இயேசுவின் கீழ் ஊழியராய்ச் செல்வோமே - 2
நீலவானில் காற்றினூடே சிலுவைக்கொடியை ஏற்றியே - 2
வாழ்க இயேசு நாமம் வாழ்க என்போமே!
செல்வோமே! செல்வோமே! செல்வோமே! -செல்வோமே!