சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம் | Seer esu naathanukku jejamankalam
சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம் | Seer esu naathanukku jejamankalam
இயேசுவுக்கு ஜெயமங்களம்
சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம், ஆதி
திரியேக நாதனுக்கு சுபமங்களம்
பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்கு
நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு - சீர்
ஆதி சருவேசனுக்கு, ஈசனுக்கு மங்களம்,
அகில பிரகாசனுக்கு, நேசனுக்கு மங்களம்,
நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாலனுக்கு
ஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு - சீர்
மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம்,
வளர்கலை கியானனுக்கு, ஞானனுக்கு மங்களம்,
கானான் நல் நேயனுக்கு, கன்னி மரி சேயனுக்கு,
கோனார் சகாயனுக்கு கூறு பெத்தலேயனுக்கு - சீர்
பத்து லட்சணத்தனுக்கு சுத்தனுக்கு மங்களம்,
பரம பதத்தனுக்கு, நித்தனுக்கு மங்களம்,
சத்திய விஸ்தாரனுக்கு சருவாதிகாரனுக்கு
பக்தர் உபகாரனுக்கு, பரம குமாரனுக்கு - சீர்




