என்ன வந்தாலும் துதித்திடுவேன் | Enna Vanthalum
என்ன வந்தாலும் துதித்திடுவேன் | Enna Vanthalum
என்ன வந்தாலும் இயேசு ராஜனை
எந்த வேளையிலும் துதித்திடுவேன் – 2
துன்பம் வந்தாலும் துயரம் வந்தாலும் - 2
தூயர் இயேசுவை துதித்து மகிழ்ந்திடுவேன் - 2
துதித்து மகிழ்ந்திடுவேன் - என்ன வந்தாலும்..
கவலை வந்தாலும் கலக்கம் வந்தாலும் - 2
நேசர் இயேசுவை துதித்து மகிழ்ந்திடுவேன் - 2
துதித்து மகிழ்ந்திடுவேன் - என்ன வந்தாலும்..
நிந்தை வந்தாலும் நெருக்கம் வந்தாலும் - 2
நாதர் இயேசுவை துதித்து மகிழ்ந்திடுவேன் - 2
துதித்து மகிழ்ந்திடுவேன் - என்ன வந்தாலும்..