எனக்கின்பம் ஏதெனக் கேளு | Enakkinpam ethenak kelu

எனக்கின்பம் ஏதெனக் கேளு | Enakkinpam ethenak kelu

எனக்கின்பம் ஏதெனக் கேளு | Enakkinpam ethenak kelu
எனக்கின்பம் ஏதெனக் கேளு | Enakkinpam ethenak kelu

நான் மகிழ்ந்து பாடிடுவேன்
 
எனக்கின்பம் ஏதெனக் கேளு நான் காரணம் சொல்வேன்
என் பாரம் நீங்கிற்றே
வம்பன் வந்தென்னை நோக்கி எங்கே நீங்கிற்றென்றால்
தெம்பாய் நீங்கிற்றென்பேன்
 
அதைக் கல்வாரியின் இரத்தத்தால் மூடியாச்சுதே
அவை வானம் பூமிபோல நீங்கிற்றே
அன்பர் மறதிக் கடலுள்ளே ஆழ்ந்தது நன்றே
ஆமென்! சுத்தமானேன்
 
அன்றொரு நாளில் இயேசு என் உள்ளத்தில் வந்தார்
என்பாரம் நீங்கிற்றே
என் உள்ளம் பொங்கிற்றே பிசாசோடிப் போனான்
அன்றே சுகமானேன்
 
சாத்தான் என்னிடம் வந்து சந்தேக மூட்டினால்
சீ போ நீங்கிற்றென்பேன்
நீ துன்பத்துள் ஆக்கிட்டாய் என் இயேசென்னை மீட்டார்
நேசர் சுகம் தந்தார்
 
எப்போதும் நேசருடன் என் நாளெல்லாம் வாழ்வேன்
அப்போதென் பாக்கியமாம்
தப்பாது பாட்டுப்பாடி ஜெபித்துப் போற்றுவேன்
ஆஹா பேரின்பமே!