உலர்ந்த எலும்புகள் | Ularntha elumpukal

உலர்ந்த எலும்புகள் | Ularntha elumpukal

உலர்ந்த எலும்புகள்  | Ularntha elumpukal
உலர்ந்த எலும்புகள் | Ularntha elumpukal

திறந்த வாசல்
 
உலர்ந்த எலும்புகள் சுவாசம் கொள்ள ஜீவன் தந்தவர்
சுத்த ஆவியில் நாம் ஒன்று சேர சித்தம் கொண்டவர்
கொஞ்சம் பெலனிலும் தேவ வசனம் காத்து நடந்ததால்
தேவ ஜனங்களே நமக்கு வழியை கர்த்தர் திறந்திட்டார்
 
திறந்த வாசல் - 2
தேவ கரம் திறந்து வைத்து ஜீவ வாசல்
 
யோர்தானில் செங்கடலில் கர்த்தர் பாதை காட்டினார்
தேவ ஜனத்தின் வழியைதடுக்க வந்தோர்அதில்அழிந்திட்டார்
கோத்திரத் தலைவன்போல் கர்த்தரிடம் பரிந்து பேசினால்
தமது ஜனத்திற்காக ஜீவதேவன் இரக்கம் செய்குவார்-திறந்த
 
மார்க்கம் தவறி யாவருமே கெட்டுப்போயினார்
ஜீவ மார்க்கம் காண யாவருமே மனம் அற்றோர் ஆனார்
நியாயத்தீர்ப்பில் நோவா போல எச்சரிப்போர் யார்
கர்த்தர்பேழைவாயில்அடைக்கும்முன்னேதிறப்பில்நிற்போர்யார்.