Parisutharae Engal Yesu – பரிசுத்தரே எங்கள் இயேசு / PPT

Parisutharae Engal Yesu – பரிசுத்தரே எங்கள் இயேசு / PPT

Parisutharae Engal Yesu – பரிசுத்தரே எங்கள் இயேசு / PPT
Parisutharae Engal Yesu – பரிசுத்தரே எங்கள் இயேசு / PPT

Parisutharae Engal Yesu
பரிசுத்தரே எங்கள் இயேசு தேவா
நானிலத்தில் நீ என்றும் ராஜா
உம்மைப் பாடுவதால் என்னில் தோல்வியில்லை
உம்மைத் துதிப்பதினால் என்னில் குறைவேயில்லை

அல்லேலூயா

உம்மை உயர்த்துவதே எங்கள் நோக்கமையா
உம்மை பாடுவதே எங்கள் மேன்மையையா

நான் கொண்ட திட்டங்கள் சிறிதாயினும் ஐயா
எனக்காய் உம் திட்டங்கள் பெரிதல்லவோ
புழுதியிலிருந்தென்னை உயர்த்தினீரே
ராஜாக்களோடு அமர்த்தினீரே

உந்தன் கிருபைகளை எண்ணி நான் பாடுவேன்
உந்தன் மகிமைதனை தினம் நான் ருசிப்பேன்

ஊழிய எல்லைகள் பெரிதாக்கினீர்
அதில் இராஜாக்கள் உதிக்கவும் உதவிசெய்தீர்
அறியாத ஜாதியை வரவழைத்தீர்
நீர் தந்த வாக்கினை நிறைவேற்றினீர்

வருத்தங்கள் பசிதலம் ஏற்ப்பட்டாலும்
எங்கள் விசுவாச கேடகம் வீழ்ந்திடாதே
நம்பினோர் நட்டாத்தில் கைவிட்டாலும்
என்னை காப்பற்ற நீர் உண்டு பயமில்லையே

Files