Paraththil Ulla | பரத்தில் உள்ள

Paraththil Ulla | பரத்தில் உள்ள

Paraththil Ulla | பரத்தில் உள்ள
Paraththil Ulla | பரத்தில் உள்ள

பரத்தில் உள்ள எங்கள் பிதாவே

உம் ராஜ்ஜியம் வருக

உம் சித்தம் நிறைவேற- 2

 

 

நீர் இல்லா உலகம் வெறுமையதே

அற்பமும் குப்பையதுமே

நீர் இல்லா வாழ்க்கை சுமையானதே

வாரும் தேவா இந்த வேளை – 2

 

 

மன்னியும் எங்கள் மீறுதல்களை

நீக்கிடும் எங்கள் ஏக்கங்களை நீர்

பிறரின் குறைகள் பாராமல் நாங்கள்

கிருபையிலே என்றும் நிலைத்திடவே – 2

 

 

காத்திடும் தீய சூழ்நிலையிலே

நிரப்பிடும் உந்தன் ஆவியால் இன்று

சாத்தானின் சூழ்ச்சிகள் உலகத்தின் நிந்தைகள்

எல்லாவற்றையும் ஜெயித்திடவே - 2