Karththaraiyum Avar Vasanaththaiyum | கர்த்தரையும் அவர் வசனத்தையும்

கர்த்தரையும், அவர் வசனத்தையும்,

ரசிப்போமா, கொஞ்சம் ருசிப்போமா – 2

வானமும் பூமியும், ஒழிந்துபோகும் வார்த்தை ஒழியுமோ -2

பூக்களும் உலரும் புல்லும் அழியும் வசனம் அழியுமோ – 2

ஆண்டவரின் வசனம் அது நிலைத்து நின்றிடுமே - 2

கட்டளைகளும் கற்பனைகளும் நித்தியம் நித்தியமே -2 ....(கர்த்தரையும்)

காலுக்கு தீபம் பாதைக்கு வெளிச்சம் வசனமல்லவோ -2

தங்கத்தை விட தேனையும் விட உசந்ததல்லவோ -2

ஆண்டவரின் வசனம் அது மனது மகிழுமே -2

கீழ்ப்படிந்து நடந்தா என்றும் நன்மை நிகழுமே -2 ....(கர்த்தரையும்)

குற்றங்கள் இல்லா குறையும் இல்லா வசனப் புத்தகமே -2

ஆத்துமாவுக்கு இரட்சிப்பை தரும் பொக்கிஷ பெட்டகமே -2

பேதைகளுக்கு எல்லாம் அது ஞானம் கொடுக்குமே -2

சத்தியத்தை விரும்புவோர்க்கு அழைப்பு கொடுக்குமே -2 ....(கர்த்தரையும்)