Arputhangal Adayalangal | அற்புதங்கள் அடையாளங்கள்
Arputhangal Adayalangal | அற்புதங்கள் அடையாளங்கள்
உம் பாதங்கள் என்னை தேடி வந்தது
உம் கரங்கள் நன்மைகள் செய்தது - 2
உம் வல்ல செயல்கள் பெரியது
நீர் திறக்கும் கதவுகள் சிறந்தது - 2
அற்புதங்கள் அடையாளங்கள்
எனக்குள் செய்யுமே
அதிசயங்கள் அசாத்தியங்கள்
இன்றே செய்யுமே - 2
தனியே சிங்க கெபியில்
என்னை தப்புவித்தது உம் கரமே
இருளில் மூழ்கும் படகில்
என்னை தூக்கிவிட்டது உம் கரமே
நான் தனியே இல்லை
என்னை படைத்தவர் உண்டு
நான் மூழ்கிப்போவதில்லை
என் இரட்சகர் உண்டு - 2
நினைத்தேன் இனி நன்மை இல்லை என்று
உம் கண்கள் கண்டதால் இன்று சுகமே
மறித்தேன் என்று மறந்தோர் முன்பு
புது ஜீவன் தந்தது அதிசயமே
ஒரு வார்த்தையை சொல்லும்
என் சூழ்நிலை மாறும்
உம் வஸ்திரத்தின் ஓரம்
என் வாழ்க்கையை மாற்றும் - 2
நீர் அற்புதமே நீர் அதிசயமே - 4




