AARATHANAIKURIYAVAR | ஆராதனைக்குரியவர் / PPT
AARATHANAIKURIYAVAR | ஆராதனைக்குரியவர் / PPT
ஆராதனைக்குரியவர் இயேசு ஒருவரே
ஆராதிக்கப்படத்தக்கவர் இயேசு ஒருவரே (2)
ஆராதிப்பேன் முழு இருதயத்தோடு
ஆராதிப்பேன் முழு ஆத்துமாவோடு
ஆராதிப்பேன் முழு மனதோடு
ஆராதிப்பேன் முழு பலத்தோடு
1. பரிசுத்த அலங்காரத்தோடு உம்மை ஆராதிப்பேன்
என் இயேசுவே (2)
ஆவியோடும் உண்மையோடும் உம்மை ஆராதிப்பேன்
என் இயேசுவே (2) - ஆராதி
2. சரீரத்தை ஜீவபலியாக ஒப்புக்கொடுத்து உம்மை ஆராதிப்பேன்
என் இயேசுவே (2)
பக்தியோடும் புத்தியோடும் உம்மை ஆராதிப்பேன்
என் இயேசுவே (2) - ஆராதி
3. கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய
மகிமை செலுத்தி ஆராதிப்பேனே (2)
பணிந்து குனிந்து உம்மை ஆராதிப்பேன்
என் இயேசுவே (2) - ஆராதி
4. இதுவரை காத்து வந்த இயேசுவை
நான் ஆராதிப்பேன் என்றென்றுமே (2)
இனிமேலும் காப்பவரை நான் ஆராதிப்பேன்
வாழ்நாளெல்லாம் (2) - ஆராதி




