Thevathi Thevan Rajathi Rajan | தேவாதி தேவன் இராஜாதி இராஜன்

Thevathi Thevan Rajathi Rajan | தேவாதி தேவன் இராஜாதி இராஜன்

Thevathi Thevan Rajathi Rajan | தேவாதி தேவன் இராஜாதி இராஜன்
Thevathi Thevan Rajathi Rajan | தேவாதி தேவன் இராஜாதி இராஜன்

தேவாதி தேவன் இராஜாதி இராஜன்
வாழ்க வாழ்கவே
கர்த்தாதி கர்த்தர் மன்னாதி மன்னன்
வாழ்க வாழ்கவே
மகிமை உமக்குத்தான்
மாட்சிமை உமக்குத்தான்
மகிமை உமக்குத்தான்
மாட்சிமை அதுவும் உமக்குத்தான்
 
திசை தெரியாமல் ஓடி
அலைந்தேன் தேடி வந்தீரே
சிலுவையில் தொங்கி இரத்தம் சிந்தி
இரட்சித்து அணைத்தீரே
 
எத்தனை நன்மை எனக்குச் செய்தீர்
எப்படி நன்றி சொல்வேன்
வாழ்நாளெல்லாம் உமக்காய் வாழ்ந்து
உம் பணி செய்திடுவேன்
 
சோதனை நேரம் வேதனை வேளை
துதிக்க வைத்தீரே
ஏதிராய் பேசும் இதயங்களை
நேசிக்க வைத்தீரே
 
வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்
அதிகமாய் செய்பவரே
மீண்டும் மீண்டும் ஆறுதல் தந்து
அணைத்து மகிழ்பவரே
 
உளாயன சேற்றில் வாழ்ந்த
என்னை தூக்கி எடுத்தீரே
கன்மலையின் மேல்நிறுத்தி - என்னை
பாட வைத்தீரே