Kanathukum Mahimaikum | கனத்துக்கும் மகிமைக்கும்
Kanathukum Mahimaikum | கனத்துக்கும் மகிமைக்கும்
கனத்துக்கும் மகிமைக்கும் பாத்திரரே
உம்மை துதித்துப் பாடுகிறோம்
கிருபை பெருகுதப்பா
உங்க மகிமை இறங்குதப்பா
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
இரண்டு மூன்றுபேர்கள்
ஒருமனமாய் துதித்தால்
நான் இருப்பேன் என்றீரே
என் துதியில் வாழ்பவரே
அனேக ஸ்தோத்திரத்தில்
உம் கிருபை பெருகுதப்பா
உம் கிருபை பெருகும் போது
உங்க மகிமை விளங்குதப்பா
உம்மை மகிமைப்படுத்துகிற
எந்த ஸ்தானத்திலும்
நீர் இறங்கி வந்திடுவீர்
எங்களை ஆசீர்வதித்திடுவீர்




