En Nesarukku Puthuppadal | என் நேசருக்கு புதுபாடல்

En Nesarukku Puthuppadal | என் நேசருக்கு புதுபாடல்

En Nesarukku Puthuppadal | என் நேசருக்கு புதுபாடல்
En Nesarukku Puthuppadal | என் நேசருக்கு புதுபாடல்

என் நேசருக்கு புதுபாடல் பாடுவேன்
பாசத்தோடு தினம் தினம் பாடுவேன்
எபி நேசருக்கு புதுபாடல் பாடுவேன்
பாசத்தோடு தினம் தினம் பாடுவேன்

கர்த்தர் என் மேய்பராய் இருக்கின்றீர்
குறைவொன்றும் எனக்கு இல்லையே (2)
ஆனந்தமே எந்நாளுமே
அப்பா உம் சமூகத்திலே - அல்லேலூயா

புல் உள்ள இடங்களில் மேய்க்கின்றீர்
அமர்ந்த தண்ணீரன்டை சேர்க்கின்றீர்
ஆனந்தமே...

புது உயிர் தினமும் தருகின்றீர்
ஆன்மாவை தேற்றி மகிழ்கின்றீர்
ஆனந்தமே...

இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பொல்லாப்புக்கு நான் பயப்படேன்
ஆனந்தமே...

நன்மையும் கிருபையும் தொடருமே
உயிரோடு வாழும் நாளெல்லாம்

நிலைத்திருப்பேன் உம் இல்லத்தில்
நித்திய நித்திய காலமாய்

என்னோடு கூட இருக்கின்றீர் உம்
கோலும் தடியும் தேற்றுமே

எதிரிகள் கண்முன் விருந்தொன்று
ஏற்பாடுசெய்கின்றீர் எனக்காய்

எண்ணெயால் அபிஷேகம் செய்கின்றீர்
பாத்திரம் நிரம்பி வழிகின்றது